வரிகளும் கட்டணங்களும்
ஈடுபிடிப்போருக்கான அனுமதிப்பத்திரம்
இலக்கு
2014 ஆம் ஆண்டின் 04 அம் இலக்க மத்திய மாகாண, மாகாண சபையின் பொருட்கள் ஈடு பிடிப்போரின் நியதிச்சட்டத்தின் கீழ் மத்திய மாகாணத்தில் பொருட்கள் ஈடு பிடிப்போருக்கான அனுமதிப்பத்திரம் வழங்கல் மற்றும் புதிய வியாபாரத்திற்கான பதிவுகளை மேற்கொள்ளல்.
உரித்துடையவர்கள்
மத்திய மாகாண 1988 ஆம் ஆண்டு 30 ஆம் இலக்க வங்கிச் சட்டத்தின் கீழ் வர்த்தக வங்கிகள் மூலம் பொருட்கள் ஈடுபிடிப்போர் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளோர் தவிர்ந்த ஏனைய அனைவரும் உரித்துடையவர்களாவார்கள்.
அழுலாக்கம்
2016 ஜனவரி 01 ஆம் திகதி முதல்.
அனுமதிக் கட்டணங்கள்
- புதிய ஈடு பிடிக்கும் வியாபாரத்திற்கான பதிவுக் கட்டணம் - 25,000.00
- ஈடு பிடிக்கும் வியாபாரத்திற்கான வருடாந்த அனுமதிக்கட்டணம் - 5,000.00
- ஈடு பிடிக்கும் வியாபார அனுமதி உரிமையாளர் வைப்பிலிட வேண்டிய பிணைத் தொகை - 100,000.00
- அனுமதி பெற்ற உரிமையாளர் மூலம் பணம் வைப்புச் செய்ய வேண்டிய அரச வங்கி - மாகாண இறைவரி ஆணையாளர் மூலம் மக்கள் வங்கி
வர்த்தமானி
- 1919/32, 2015.06.15
- 1921/5, 29.06.2015
கனிப் வரி
வரைவிலக்கணம்
- 1996 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க மத்திய மாகாண நிதி வரைவுச் சட்டத்தின் 09 ஆவது பிரிவின்படி கனிப் வரி அறவிடப்படுகின்றது.
அவை அறவிடப்படுவது
- 1992 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க சுரங்கம் மற்றும் கனிப்பொருள்கள் சட்டத்தின் கீழ் அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுஇ மாகாணத்துக்குள் அமைந்துள்ள காணியொன்றில் கனிப்பொருள்களை அகழும் மற்றும் அகற்றிச் செல்லும் தொழிலொன்றை மேற்கொள்ளும் ஒவ்வொருவரும் இந்த வரிக்கு உட்படுவர்.
அமுலாகும் காலம்
- 2004 ஏப்பிரல் மாதம் 01 ஆம் திகதி முதல்
கனிப்பொருள் வரிக் கட்டணங்கள்
- மொத்தப் பெறுமதியால் - 0.5%
வர்த்தமானி
- 1851/6, 24.02.2014