எம்மைப்பற்றி
திணைக்களத்தின் அபிவிருத்தி பற்றிய வரலாறு
மாகாண இறைவரித் திணைக்களத்தைத் தாபித்தல் (மத்திய மாகாணம்)
Tஇலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு யாப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் மாகாண சபை நிருவாக அலகுகள் தாபிக்கப்பட்டன. இறைவரி வருவாய்களைத் தோற்றுவிக்கும் செயற்பாடுகள் பற்றிய நோக்கத்துடன் மாகாண இறைவரித் திணைக்களங்கள் தாபிக்கப்பட்டன.
கண்டி, நுவரெலியா, மாத்தளை ஆகிய மாவட்டங்களை ஒன்றிணைத்த நிருவாக அலகாக மத்திய மாகாண சபை திகழ்கின்றது. 1990ஆம் ஆண்டின் நிதிச் சாசனத்தின் 17ஆம் இலக்க சட்ட வரைவுக்கு அமைய மத்திய மாகாண சபையின் இறைவரித் திணைக்களம் அமைக்கப்பட்டது. அரசியல் யாப்பின் படி வழங்கப்பட்டுள்ள ஏற்பாடுகளின் கீழ் நிதிச் சாசனத்தை மத்திய மாகாண சபை நிறைவேற்றியுள்ளது.
மேற்குறித்த நிதிச் சாசனத்துக்கும் 1996ஆம் ஆண்டின் 3ஆம் இலக்கத் திருத்தத்துக்கும் மற்றும் 2014ம் ஆண்டின் 4ம் இலக்க மத்திய மாகாணத்தின் அடகு பிடிப்போரது நியதிச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைவாக இறைவரிக்கான 13 அம்சங்கள் மாகாண இறைவரி ஆணையாளரால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கையாளப்படுகின்றன.
- முத்திரைத் தீர்வை
- வியாபார மொத்த விற்பனை வரி (BTT)
- கலால் வரி வருவாய்கள்
- லொத்தர் சீட்டு வரி
- மோட்டார் வாகனக் கட்டணங்கள்
- நீதிமன்ற தண்டப்பணம்
- பரிசுப் போட்டிகள் மீதான வரி
- பந்தய வரி
- காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டம் மற்றும்; அரசாங்கக் காணிகள் கட்டளைச் சட்டத்தின் கீழான காணிப் பகிர்வுக் கட்டணங்கள்
- கனியவள உரிமை மீதான வரி
- வனசீவராசிகள் தாவரப் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் மீதான கட்டணங்கள்
- அளவைகள் நிறுவைகள் கட்டளைச் சட்டத்தின் மீது விதிக்கப்படும் கட்டணங்கள்
- பொருட்கள் அடகு பிடிப்போரது நியதிச் சட்டத்தின் அறவிடப்படும் தொகை
மேற்குறித்த 13 அம்சங்களில் பின்வரும் அம்சங்கள் மாகாண இறைவரித் திணைக்களத்தின் மூலம் நேரடியாக நிருவகிக்கப்படுகின்றன.
- முத்திரைத் தீர்வை
- வியாபார மொத்த விற்பனை வரி (BTT)
- பந்தய வரி
- கனிப் வரி
- பொருட்கள் அடகு பிடிப்போரது அனுமதிப் பத்திர தொகை
பௌதிக மற்றும் மனிதவள அபிவிருத்தி
1991 ஆம் ஆண்டில் தாபிக்கப்பட்டதிலிருந்து உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திலிருந்து இணைக்கப்பட்ட 7 அலுவலர்களுடன் செயற்படத் தொடங்கிய திணைக்களம் தற்போது, இது ஒரு மூடிய சேவையாதலால் அனைத்துத் தரங்களையும் உள்ளடக்கிய அறுபத்தொரு (61) ஆளணியினரைக் கொண்டுள்ளது. இந்த 61 ஆளணியினருள் 56 பேர் நிரந்தர அலுவலர்களாகவும் 5 பேர் சமயோசித அலுவலர்களாகவும் உள்ளனர்.
திணைக்களம் தாபிக்கப்படும் போது அதற்கெனச் சொந்தமான இடமொன்று இருக்கவில்லை. 1991 முதல் 1999 வரையுள்ள காலத்துக்குள் மூன்று இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. 1999 இல் திணைக்களம் தனக்கெச் சொந்தமான ஒரு புதிய இடத்தைக் கையேற்றுக் கண்டி மாநகர சபை எல்லைக்குள் நான்கு மாடிகளைக் கொண்டுள்ள ஒரு கட்டடத்தைக் கொண்டுள்ளது.
இறைவரி அபிவிருத்தி
1991 ஆம் ஆண்டில் ரூ. 104 மில்லியனாக இருந்த புரள்வு வரியை 576 மில்லியனாக அதிகரித்துக்கொள்ள 2006 ஆம் ஆண்டில் முடிந்தது. 2008 ஆம் ஆண்டுக்கான இறைவரி இலக்கு ரூ. 1170 மில்லியனாக இருந்ததுடன் அவ்வாண்டில் ரூ. 1328 மில்லியனை சேகரிக்க முடிந்தது. 2010 ஆம் ஆண்டில் அது ரூ. 1683 மில்லியன் வரை அதிகரிக்கப்பட்டது.
1991 ஆம் ஆண்டின் முத்திரைத் தீர்வையாக ரூ. 30 மில்லியனாக இருந்ததுடன் அதனை 2011 ஆம் ஆண்டில் ரூ. 684 மில்லியனாக அதிகரித்துக்கொள்ள முடிந்துள்ளது.
தொழினுட்ப அபிவிருத்தி
Uஅரச தாபனமொன்றாக இருக்கும் திணைக்களம் 2000 ஆம் ஆண்டு வரை கைவினைத் தரவு முறைமையைக் கடைபிடித்து வந்ததுடன் 2000 ஆம் ஆண்டு முதல் தனியார் கணினித் தரவு முறைமைக்கு மாற்றம் பெற்றது. 2008 ஆம் ஆண்டளவில் திணைக்களம் தரப்பட்ட வரைவுக்குள் எந்தவொரு அலுவலரும் உயர்மட்டப் பாதுகாப்புடனான வலையமைப்புடன் பல்பாவனையாளர் தரவு முறைமையைப் பயன்படுத்தும் அளவில் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது. தற்போது முற்றிலும் கணினிமயப்படுத்தப்பட்ட சுற்றாடலுக்குள் பணியாளர்கள் தமது தேர்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்.
சேவை அபிவிருத்தி
மரபு ரீதியான அரச அலுவலக முறையிலிருந்து விடுபட்டு மாகாண இறைவரித் திணைக்களம் (மத்திய மாகாணம்) திணைக்கள மைய அமைப்பிலிருந்து மக்கள் மையப்படுத்தப்பட்டு 'மஹிந்த சிந்தனையின் எதிர்கால நோக்கு" என்பதற்கமைய மாற்றம் பெற்றுள்ளது.
விசேட அடைவுகள்
- 2007-2008 மற்றும் 2009 ஆண்டுகளில் திணைக்களங்களுக்கிடையில் நடாத்தப்பட்ட போட்டிகளில் தொடராக உயர்மட்ட இடங்களை மத்திய மாகாணத் திணைக்களம் வென்றெடுத்துள்ளது.
- இறைவரி வருவாயைத் தோற்றுவிப்பதில் இந்தத் திணைக்களம் கௌரவ ஆளுநர்> கௌரவ முதலமைச்சர் மற்றும் மத்திய மாகாண பிரதம செயலாளர் ஆகியோரால் நிதமும் பாராட்டப்பட்டு வருகின்றது.
ஆணையாளரது ஆசிச் செய்தி
தகவற் தொழினுட்ப விருத்தியூடன் இணைந்து மத்திய மாகாணத்தின் நிதி வலுவூட்டத்துக்கு நேரடியாகப் பங்களிப்புச் செய்யும் உங்களுக்குத் தேவையான சேவைகளை மேலும் வினைத்திறனுடன் கிட்டச் செய்வதற்கென இணைய தளமொன்றை ஆரம்பிக்கக் கிடைத்ததைப் பெரும் பேறாக நான் கருதுகின்றேன்.
மலைநாட்டின் அபிவிருத்தியையும் அதன் மூலம் முழு நாட்டினதும் அபிவிருத்தியை எதிர்பார்க்கும் நீங்கள் அனைவரும் இந்த வசதிகளைப் பயன்தரும் வகையில் பயன்படுத்தி நாட்டை அபிவிருத்தி செய்யும் பயணத்தில் உங்களது பங்களிப்பை உச்ச அளவில் வழங்குவீர்கள் என்று நம்புகின்றேன்..
நன்றியுள்ள.
எச்.கே. அஜந்தா பெரேரா
ஆணையாளர்
மாகாண இறைவரித் திணைக்களம்
மத்திய மாகாணம்
கடமைகளும் பொறுப்புகளும்
தற்காலத் தேவைகளை எதிர்கொள்ளும் முறையான கொள்கையொன்றை பராமரித்துச் சட்டத்துக்கு அமைவான வகையில் வரிகளையும் தீர்வைகளையும் குறித்தொதுக்கப்பட்ட இலக்குகளுக்கும் அப்பால் சென்று மத்திய மாகாணத்தின் பொதுமக்களது நலன் கருதிய நிதி வளங்களை அடைவதற்கென தகவுத்திறன் மிக்க, ஆக்கபூர்வமான சமத்துவம் கொண்ட முறையொன்றைத் தாபித்தல்.
இலக்குகள் குறிக்கோள்கள்
இலக்குகள்
- இறைவரி வருவாய் இலக்குகளை எட்டுதல்
- வருவாய்களைத் தோற்றுவிக்கும் புதிய வழிவகைகள் பற்றிய ஆராய்ச்சியும் அபிவிருத்தியும்.
- தொழிற்றுறை சார் தேர்ச்சிகளின் அபிவிருத்தி
- நல்லாட்சி
குறிக்கோள்கள்
- சட்டத்துடன் இயைபாகும் வகையிலான கணிப்பீடும் அறவீடும;
- வரியிறுப்போரை வரி செலுத்துவதன் பால் ஊக்குவித்தல்
- வரி செலுத்தப்படாத நிலுவையைப் பூச்சிய மட்டத்துக்குக் கொண்டுவருதல்
- முறைப்படுத்தப்பட்ட தரவுக் கட்டமைப்பு முறைமை
- வரிகளையும் தீர்வைகளையும் இறுப்பதில் சுயவிருப்புடன் முன்வரும் பொதுமக்கள்.
- சட்டமாக்கப்பட்ட விதிகளின் கட்டமைப்புக்குள் வருவாய்களைத் தோற்றுவிக்கும் புதிய வழிவகைகளைச் செயற்படுத்துதல்
- தொழில்சார் தேர்ச்சியில் விருத்தி கொண்டுள்ள பணியாட் குழுமம்
- விதியாக்கப்பட்ட வருவாய் இலக்குகள்
- திணைக்களத்தின் கணிப்பீட்டிய அடைவு
- அரசாங்க சட்டதிட்டங்களுக்குக்கமையச் செயற்படும் ஒரு திணைக்களம்
- முறைப்பாடுகளற்ற ஒரு திணைக்களம்