வரிகளும் கட்டணங்களும்
புரள்வு வரி
வரைவிலக்கணம்
- 1990 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க மத்திய மாகாண நிதி வரைவுச் சட்டத்தின் 03 ஆவது பிரிவின்படி புரள்வு வரி அறவிடப்படுகின்றது.
அவை அறவிடப்படுவது
- ஒருவகையான பொருள் அல்லது திரவியம் மத்திய மாகாணத்துக்குள் விற்பனை செய்யப்படுமெனில், அந்த விற்பனைப் பெறுமதியின் 1% உம் 5% உம் என்ற விகிதத்தில் விதிக்கப்படும்.
செல்லுபடிக் காலம்
- 1991 சனவரி மாதம் 01 ஆம் திகதி, 2011 சனவரி மாதம் 01 ஆம் திகதி முதல் நிறுத்தப்பட்டுள்ளது.
புரள்வு வரிக் கட்டணங்கள்
தங்கம், இரத்தினக் கற்கள், நகைகள், தளபாடங்கள், அரிமரம் - 5%
சிகரட் மற்றும் மதுபானம் - 1%
வர்த்தமானி
- 636/13, 1990.11.15
- 642/18, 1990.12.28
- 917/2,1996.04.01
- 1371/23,2004.12.16
- 1389/5,2005.04.18
- 1467/14,2006.10.17
- 1476/1,2006.12.18
முத்திரைத் தீர்வை
வரைவிலக்கணம்
- 1990 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க மத்திய மாகாண நிதி வரைவுச் சட்டத்தின் 37 ஆவது பிரிவின் கீழ் முத்திரைத் தீர்வைகள் அறவிடப்படுகின்றன.
அது இவ்வாறு அறவிடப்படுகின்றது
- மத்திய மாகாணத்துக்குள் அமைந்தள்ள அசையாச் சொத்துக்களின் கைமாற்றம் தொடர்பான ஒவ்வொரு செயற்பாட்டின் மீதும்
- இலங்கையின் மத்திய மாகாணத்தில் சட்டபூர்வமாக நிறுவப்பட்டுள்ள எந்தவொரு நீதிமன்றத்திலும் சமர்ப்பிப்பதற்காக கோவைப்படுத்தப்பட்ட ஒவ்வொரு ஆவணத்தின் மீதும்
செல்லுபடிக் காலம்
- 1991 ஆம் ஆண்டு சனவரி 01 ஆம் திகதி முதல்
முத்திரைத் தீர்வைக் கட்டணங்கள்
01. |
எந்தவொரு ஆதனத்தினதும் கைமாற்றம் - இணை உரித்தாளர்களிடையே அல்லாத* |
||||||
அ. சமமான பெறுமதியாயின் |
அவ்வாறான சொத்துக்களைக் கைமாற்றம் செய்யும் போது அதன் சந்தைப் பெறுமதியின் மீது அறவிடப்படும் அதே தீர்வையை அறவிடுதல் |
||||||
|
ஆ. சமனற்ற பெறுமதியாயின் |
அவ்வாறான சொத்துக்களைக் கைமாற்றம் செய்யும் போது அதன் அதிகூடிய பெறுமதியின் மீது கணிக்கப்பட்ட சந்தைப் பெறுமதியின்படி அதே தீர்வையை அறவிடுதல் |
|||||
எந்தவொரு ஆதனத்தினதும் கைமாற்றம் - இணை உரித்தாளர்களிடையே* |
|||||||
அ. சமமான பெறுமதியாயின் |
|
10.00 |
|||||
|
ஆ. சமனற்ற பெறுமதியாயின் |
ஒரு சொத்தின் கைமாற்றத்தின் போது செலுத்தப்பட வேண்டிய அதே அளவுத் தீர்வை கைமாற்றம் செய்யப்படும் சொத்தின் சந்தைப் பெறுமதியின் வித்தியாசமாக அது அமையும். |
|||||
02. |
அசையாச் சொத்துக்களின் நன்கொடை* |
||||||
அ. பெறுமதி ரூ. 50,000 அல்லது அதிலும் குறைவானவை |
ஒவ்வொரு 100 ரூபாவுக்கும் அல்லது அதன் பகுதிக்கும் |
3.00 |
|||||
|
ஆ. பெறுமதி ரூ. 50,000 ஐத் தாண்டியவை |
முதல் 50.000 ரூபாவின் மீது |
1,500.00 |
||||
மீதியின் ஒவ்வொரு 100 ரூபாவுக்கும் |
2.00 |
||||||
03. |
Selling, immovable property* |
|
|||||
அ. பெறுமதி ரூ. 100,000 அல்லது அதிலும் குறைவானவை |
ஒவ்வொரு 100 ரூபாவுக்கும் அல்லது அதன் பகுதிக்கும் |
3.00 |
|||||
|
ஆ. பெறுமதி ரூ. 100,000 ஐத் தாண்டியவை |
முதல் 100,000 ரூபாவின் மீது |
3000.00 |
||||
மீதியின் ஒவ்வொரு 100 ரூபாவுக்கும் |
4.00 |
||||||
04. |
முன்வைக்கப்படும் அல்லது கோவைப்படுத்தப்படும் ஒவ்வொரு ஆவணத்தின் மீதும்* |
||||||
அ. உயர் நீதிமன்றம் |
ஒவ்வொரு 1000 ரூபாவுக்கும் அல்லது அதன் பகுதிக்கும் (உச்ச தொகை ரூ. 2,000) |
2.00 |
|||||
05. |
ஆ. மாவட்ட நீதிமன்றம் |
ஒவ்வொரு 1000 ரூபாவுக்கும் அல்லது அதன் பகுதிக்கும் (உச்ச தொகை ரூ. 1,000) |
1.00 |
வர்த்தமானி
* வர்த்தமானி அறிவித்தல் -642/18, 1990.12.28
முத்திரைத் தீர்வைக்கான மதிப்பீடு (அசையாச் சொத்துக்கள்)
*. எந்தவொரு ஆதனத்தின் மீதும் (நன்கொடையாக வழங்கப்பட்ட அசையாச் சொத்துக்கள் தவிர்ந்த) ஏனைய எந்தவொரு சொத்தும் எந்தவொரு திகதியிலும் என்பது, மதிப்பீட்டாளரின் கருத்துப்படி குறித்த திகதியில் திறந்த சந்தையில் வாங்கப்பட்ட விலையாகும்.;
*. நன்கொடையாக வழங்கப்பட்ட எந்தவொரு அசையாச் சொத்தும்,அசையாச் சொத்தாக 1977 மார்ச்சு மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் கொடையாளியால் வழங்கப்பட்டதெனின், அது -
- பகிரங்கச் சந்தையில் 1977 மார்ச்சு மாதம் 31 ஆம் திகதியில் விற்கப்பட்டு மதிப்பீட்டாளரது கருத்தின்படி அது வாங்கப்படும் விலையுடன் குறித்த ஆதனத்தை அபிவிருத்தி செய்யவும், திருத்தியமைக்கவும், மேலதிகமாகச் சேர்க்கவும் செய்யப்பட்டிருப்பின் அத்தொகை 1977 மார்ச்சு மாதம் 31 ஆம் திகதியின் பின்னர் நன்கொடை வழங்கப்படும். ஆதனத்துடன் சேர்க்கப்பட்டதாகும்.
- மதிப்பீட்டாளரின் கருத்தின்படி குறித்த ஆதனம் பகிரங்கச் சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வாங்கப்படுமெனின்,குறித்த தொகை நன்கொடை வழங்கப்பட்ட திகதியில் அதற்கான விலையாகும்.;
எந்த விலை குறைவாக உள்ளதோ
*. நன்கொடையாக வழங்கப்பட்ட ஏதேனுமொரு அசையாத சொத்து, அது அசையாச் சொத்தாக 1977 மார்ச் மாதம் 31 ஆம் திகதியின் பின்னர் கொடையாளியார் ஏற்கப்பட்டதென்றால், அது -
- பகிரங்கச் சந்தையில் 1977 மார்ச்சு மாதம் 31 ஆம் திகதியில் விற்கப்பட்டு மதிப்பீட்டாளரது கருத்தின்படி அது வாங்கப்படும் விலையுடன் குறித்த ஆதனத்தை அபிவிருத்தி செய்யவும், திருத்தியமைக்கவும், மேலதிகமாகச் சேர்க்கவும் செய்யப்பட்டிருப்பின் அத்தொகை 1977 மார்ச்சு மாதம் 31 ஆம் திகதியின் பின்னர் நன்கொடை வழங்கப்படும். ஆதனத்துடன் சேர்க்கப்பட்டதாகும்.
- மதிப்பீட்டாளரின் கருத்தின்படி குறித்த ஆதனம் பகிரங்கச் சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வாங்கப்படுமெனின், குறித்த தொகை நன்கொடை வழங்கப்பட்ட திகதியில் அதற்கான விலையாகும்.;
எந்த விலை குறைவாக உள்ளதோ
*. செயற்பாடு நிறைவேற்றப்படும் தருணத்தில் தீர்வை செலுத்தப்படுதல்
*. அசையாத சொத்தொன்றைக் கைமாற்றம் செய்யும்போது செலுத்தப்படவேண்டிய முத்திரைத் தீர்வையைக் குறித்து வைக்கப்பட்ட வங்கியொன்றில் செலுத்தியதும, வழங்கப்படும் சான்றிதழில் செலுத்தப்பட்ட முத்திரைத் தீர்வையையும், அன்றைய திகதியையும் குறிப்பிட்டுக் குறித்த சான்றிதழில் ஒட்டுதல் வேண்டும்.
இந்த வங்கிச் சான்றிதழ்களை மக்கள் வங்கி அல்லது இலங்கை வங்கியின் எந்தவொரு கிளையிலிருந்தும் பெற்றுக்கொள்ள முடியும்