முதன்மைச் செயற்பாட்டுப் பகுதிகள்

Road Development Servicesசந்தைப் பெறுமதியின் மீதான முத்திரைத் தீர்வை மதிப்பீடும் சேகரிப்பும்

  • உரிய அலுவலகங்களுக்குச் சென்றும் வங்கிகளிலிருந்தும் தகவல்களைச் சேகரித்தல்
  • பகிரங்க நொத்தாரிசுகளுடனும் காணிப் பதிவாளர்களுடனும் நெருங்கிய தொடர்புகளை வைத்திருத்தல்
  • தகவல்களின் அடிப்படையில் கோவைகளை ஆரம்பித்தல்
  • கோவைகளுக்குத் தேவையான கருவிகளைப் பெறுதல்
  • கோவைகளைப் பகுப்பாய்வு செய்தல்
  • செலுத்தப்பட்ட தீர்வை போதாமற் போனால் மேலதிகத் தீர்வையை மதிப்பிடுதல்

வரி செலுத்துவதில் வரியிறுப்போரை ஊக்குவித்தல்

  • சுயமதிப்பீட்டின் அடிப்படையில் வரியிறுப்போர் தமது வரியையும் தீர்வையையும் செலுத்த ஊக்குவித்தல்
  • பொருத்தமான இடங்களில் அறிவித்தல்களைக் காட்சிப்படுத்த ஏற்பாடு செய்தல்
  • அச்சு ஊடகச் செய்தியை வெளியிடுதல்
  • அறிவூட்ட நிகழ்ச்சித்திட்டங்களை நடத்துதல்
  • சொத்துக்களை மேற்பார்வை செய்தல்
  • வரியிறுப்போருடனான நேர்காணல்கள் மூலம் வரிகள் இறைகள் பற்றிய ஆலோசனைகளை வழங்குதல்

வரி செலுத்தத் தவறிய நிலுவையைப் பூச்சிய மட்டத்திற்குக் கொண்டுவருதல்

  • வரி செலுத்தத் தவறிய தற்போதைய நிலுவைத் தொகையைக் குறைத்தல்
  • மேன்முறையீடுகள் /எதிர்ப்புகள் ஏற்படுத்துதல்
  • வரியிறுப்போரிடம் சென்று வரி செலுத்தத் தவறிய தொகையைச் சேகரித்தல்
  • வரி செலுத்தாத அல்லது வரி செலுத்த இணக்கம் காணாதோருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கைகளைத் தொடருதல்

புதுப்பிக்கப்பட்ட தரவு நிரற்படுத்தும் முறை

  • பதிவகத்தில் கோவைகளைப் புதுப்பித்தல்
  • 31.12.2010 வரையுள்ள BTT கோவைகளை நிறைவுசெய்தல்
  • புதுப்பிக்கப்பட்டு கணினிமயப்படுத்தப்பட்ட தரவு நிரற்படுத்தலைக் கணினி வலையமைப்பு ஊடாக அடைய வழிசெய்தல்

இறைவரியைத் தோற்றுவிக்கும் புதிய வழிவகைகளை ஆராய்தலும் அபிவிருத்தி செய்தலும்

  • சட்ட ஏற்பாடுகளுக்கு அமைவான வகையில் இறைவரி வருவாய் வழிவகைகள் பற்றிக் கற்றறிதல்
  • இனங்காணப்பட்ட வழிவகைகள் பற்றிய சாத்தியக் கற்கைகள்
  • ஓவ்வொரு வழியிலிருந்தும் பெறப்படவுள்ள உத்தேச இறைவரி பற்றி அளவிடுதல்
  • மிகவும் பொருத்தமான வருவாய் வழிவகைகள் பற்றித் தீர்மானித்தல்
  • முன்மொழியும் உத்தேச புதிய வருவாய் வழிவகைகளது அங்கீகாரத்துக்கென அவற்றைப் பிரதம செயலாளரிடம் முன்வைத்தல்
  • அங்கீகரிக்கப்பட்ட வருவாய் வழிவகைகளைச் செயற்படுத்துதல்

பணியாட் குழுவினரது தொழில்சார் தேர்ச்சிகளை அபிவிருத்தி செய்தல்

  • பயிற்சி மற்றும் அபிவிருத்தித் திட்டங்களை நடாத்துதல்
  • தொழில்சார் பயிற்சிக்கான பகுதிகளை இனங்காணுதல்
  • நடைமுறையொன்றைத் தயாரித்தல்
  • வள ஆலோசகர்களையும் அமையங்களையும் இனங்காணுதல்

செயற்பாடுகளைப் பாராட்டுதல்

  • ஒவ்வொரு அலுவலரையும் பற்றிய நாளாந்த> மாதாந்த முன்னேற்ற அறிக்கை
  • திணைக்களச் செயற்பாடு பற்றிய அரையாண்டு அறிக்கை
  • திணைக்களச் செயற்பாடு பற்றிய ஆண்டறிக்கை

நல்லாட்சி

  • அரச சட்டவிதிகளுக்கு அமையச் செயற்படுதல்
  • கணக்காய்வு விசாரணைகளைக் குறைத்தல்
  • சேவைப் பெறுநர்களது முறைப்பாடுகளைப் பூச்சிய நிலைக்குக் கொண்டுவருதல்
FaLang translation system by Faboba